அகிலம் முழுதும் வலையில் உலாவிக்கொண்டிருக்கும் அன்புள்ளம் கொண்ட இனிய இந்து பெருமக்களுக்கு என் இதயம் கணிந்த தீபாவளி வாழ்துக்களை காணிக்கை ஆக்குகின்றேன்.
மனிதம் மெது மெதுவாக மறைந்து கொண்டிருக்கும் நிலையில்,தாமாக அறிவியல்,அல்லது அறிவுக்கண்கொண்டு உலகில் நேர்வழியில் நடப்பதைத் தேர்ந்தெடுக்காமல்,இரத்த வழி வழியாக மதங்களைத்தேர்ந்தெடுத்துக்கொண்டு அதிலேயே மூர்க்கத்தனத்துடன் நடக்கவும்,அடுத்து வரும் சந்ததியினரை நடக்கவும் தூண்டிக்கொண்டிருக்கும் உண்மையான மதவெறியர்கள்,தீவிரவாதிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில்,எங்கேனும் உண்மையான மனித உள்ளங்கள்,உண்மையை உணர்ந்தும் அதை மறைக்காமல் வெளியில் சொல்ல தயங்காத உள்ளங்களை வாழ்த்துகிறேன்.
பொருள் வழி அல்லது ஆதாயம் தரும் வழி எதுவென்று பார்க்காமல் நேர்வழி எதுவென்று சி்ந்திக்கத்துடிக்கும் இனிய உள்ளங்களைத்தேடுகின்றேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக